திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செங்கண் ஏற்றவர் தில்லையே நோக்கி இத் திருந்து உலகினிற்கு எல்லாம்
மங்கலம் தரு மழ இளம் போதகம் வரும் இரு மருங்கு எங்கும்
தங்கு புள் ஒலி வாழ்த்து உரை எடுத்து முன் தாமரை மது வாசப்
பொங்கு செம்முகை கரம் குவித்து அலர் முகம் காட்டின புனல் பொய்கை

பொருள்

குரலிசை
காணொளி