திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மா மறையோர் குழாத்தின் உடன் மல்கு திருத் தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து
தாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மை ஆலே
பூ மறுகு சிவ ஆனந்தப் பெருக்கு ஆறு போத அதன் மீது பொங்கும்
காமர் நுரைக் குமிழி எழுந்து இழிவன போல் விளங்கும் பெரும் காட்சித்து ஆக.