திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘அப்பர் தாம் எங்கு உற்றார் இப்பொழுது’ என்று அருள் செய்யச்
செப்பு அரிய புகழ்த் திருநாவுக் கரசர் செப்புவார்
‘ஒப்பு அரிய தவம் செய்தேன் ஆதலினால் உம் அடிகள்
இப்பொழுது தாங்கிவரப் பெற்று உய்ந்தேன் யான்’ என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி