திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன்னவன் உரைப்பது இன்றி இருப்ப மா தேவியார்தாம்
‘என் உயிருக்கு உயிராய் உள்ள இறைவ! நீ உற்றது என்னோ
முன் உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்து இருந்தாய் இன்று
பன்னிய உள்ளத்து எய்தும் பருவரல் அருள் செய்’ என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி