திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண் மலர்கள் நீர் ததும்பக் கைம் மலர்களால் பிசைந்து,
வண்ண மலர்ச் செங்கனிவாய் மணி அதரம் புடை துடிப்ப,
எண் இல் மறை ஒலி பெருக, எவ் உயிரும் குதுகலிப்ப
புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அமுது அருளினார்.

பொருள்

குரலிசை
காணொளி