திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தக்க அந்தணர் மேவும் அப் பதியினில் தான் தோன்றி மாடத்துச்
செக்கர் வார் சடை அண்ணலைப் பணிந்து இசைச் செந்தமிழ்த் தொடைபாடி
மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுது போய் மீயச்சூர் பணிந்து ஏத்திப்
பக்கம் பாரிடம் பரவ நின்று ஆடுவார் பாம்புர நகர் சேர்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி