திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
பரவிய காதலில் பணிந்து பாலறா வாயர் புறத்து அணைந்து பண்பு
விரவிய நண்பு உடை அடிகள் விருப்புறு காதலில் தங்கி மேவும் நாளில்,
அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய எழும் ஆதரவால் அணைந்து செல்வார்
உரவு மனக் கருத்து ஒன்றாம் உள்ளம் உடையவர்க்கு விடை உவந்து நல்கி.