திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
தாது அவிழ் செந்தாமரையின் அக இதழ் போல் சீறடிகள் தரையின் மீது
போதுவதும் பிறர் ஒருவர் பொறுப்பதுவும் பொறா அன்பு புரிந்த சிந்தை
மாதவம் செய் தாதையார் வந்து எடுத்துத் தோளின்மேல் வைத்துக் கொள்ள
நாதர் கழல் தம் முடிமேல் கொண்ட கருத்து உடன் போந்தார் ஞானம் உண்டார்