திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சண்பைத் திருமறையோர்கள் எல்லாம் தம்பிரானாரைப் பணிந்து போந்து
நண்பின் பெருகிய காதல் கூர்ந்து ஞான சம்பந்தர் மடத்தில் எய்திப்
பண்பில் பெருகும் கழுமலத்தார் பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டே
எண் பெற்ற தோணிபுரத்தில் எம்மோடு எழுந்து அருளப் பெற வேண்டும் என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி