பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மெய்ம் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார் தம் மேலைச் சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளைமை தானோ செம் மேனி வெண் நீற்றார் திருத் தோணிச் சிகரம் பார்த்து அம்மே அப்பா என்று என்று அழைத்து அருளி அழுது அருள.