பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அம் மலர்க் குழலினார்க்கும் அமைச்சர்க்கும் அருள வேண்டிச் செம் மணிப் பலகை முத்தின் சிவிகை மேற் கொண்ட போதில் எம் மருங்கினிலும் தொண்டர் எடுத்த ஆர்ப்பு எல்லை இன்றி மும்மை நீடு உலகம் எல்லாம் முழுதுடன் நிறைந்தது அன்றே.