திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் தென் திசைத் திருவாயில்
எல்லை நீங்கி உள் புகுந்து இருமருங்கும் நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ
மல்லல் ஆவணம் மறுகிடைக் கழிந்து போய் மறையவர் நிறை வாழ்க்கைத்
தொல்லை மாளிகை நிரைத் திரு வீதியைத் தொழுது அணைந்தனர் தூயோர்