திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும் எறும்பியூர் மாமலையே முதலா
வேறு பதிகள் பலவும் போற்றி விரவும் திருத்தொண்டர் வந்து சூழ
ஈறு இல் புகழ்ச் சண்பை ஆளியார் தாம் எண் திசையோரும் தொழுது இறைஞ்ச
நீறு அணி செம்பவளப் பொருப்பின் நெடும் கள மா நகர் சென்று சேர்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி