திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மெய்ந் நிறைந்த செம் பொருளாம் வேதத்தின் விழுப் பொருளை வேணி மீது
பை நிறைந்த அரவு உடனே பசும்குழவித் திங்கள் பரித்து அருளுவானை
மை நிறைந்த மிடற்றானை மடையில் வாளைகள் பாய என்னும் வாக்கால்
கை நிறைந்த ஒத்து அறுத்துக் கலைப் பதிகம் கவுணியர் கோன் பாடும் காலை.