திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மெய்த்திரு ஞான சம்பந்தர் வாக்கின் வேந்தரை நோக்கி விருப்பினாலே
அப்பரை இங்கு அணையப் பெறும் பேர் அருள் உடையோம் அந்தனர் ஆரூர்
எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட, ஈறு இல் பெருந் தவத்தோர்
செப்பிய வண் தமிழ் மாலையாலே திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார்