திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும்
வேதவனத்து அருமணியை மீண்டும் புக்குப்
பாதம் உறப் பணிந்து எழுந்து பாடிப் போற்றிப்
பரசி அருள் பெற்று விடை கொண்டு போந்து
மா தவத்து வாகீசர் மாறாத வண்ணம்
வணங்கி அருள் செய்து விடை கொடுத்து மன்னும்
காதலினால் அருமை உறக் கலந்து