திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அயவந்தி அமர்ந்து அருளும் அங்கணர் தம் கோயில் மருங்கு அணைந்து வானோர்
உயவந்தித்து எழு முன்றில் புடை வலம் கொண்டு உள்புக்கு ஆறு ஒழுகும் செக்கர்
மய அந்தி மதிச் சடையார் முன் தாழ்ந்து மாதவம் இவ் வையம் எல்லாம்
செய வந்த அந்தணனார் செங்கைமேல் குவித்து எழுந்து திருமுன் நின்றார்.